Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூரில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து- அண்ணாமலை கண்டனம்

கடலூரில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து- அண்ணாமலை கண்டனம்

-

கடலூரில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து- அண்ணாமலை கண்டனம்

கடலூரில் பள்ளிக்கூடம் செல்ல பேருந்து நிலையத்தில் மாணவன் நின்றுகொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பித்துள்ளனர்.

சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து | Tamil News  College girl who refused to love was stabbed

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து வைப்பவர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டும் முதலமைச்சர், கொலை போன்ற கடும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். முதலமைச்சரின் கவனம் சட்டம் ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ