spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அண்ணாமலை

முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

-

- Advertisement -

 

"மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது தமிழக அரசு"- அண்ணாமலை பேட்டி!

we-r-hiring

முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டாஸ்மாக் மது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. டாஸ்மாக் மதுபானத்தின் தரம் குறைவு காரணமாகவே சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை நாடுகின்றனர். சென்னையில் சுகாதாரம் மோசமாக உள்ளது. அடிப்படை சுகாதாரம் அதளபாதாளத்தில் உள்ளது

ஈஷாவை பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை. 1994ல் கள்ள சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போனவர்தான் இன்றைய தமிழக அமைச்சர் ஆர்.காந்தி. அடுத்த வரும் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும்” என இவ்வாறு பேசினார்.

 

MUST READ