ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு- நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க திட்டம்
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2,438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிஷ் எந்தவித வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.
இந்நிலையில் ஆருத்ரா நிறுவன இயக்குநர் ஹரீஷ்க்கும் ஆர்.கே.சுரேஷ்க்கும் இடையே பண பரிவர்த்தனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓடியதாக தெரிகிறது. அவரை பிடித்து விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் திட்டமிட்டுள்ளனர். ஹரீஷின் வாக்குமூலம் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.