Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்படி ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் - ரகுபதி

சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் – ரகுபதி

-

ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர் என் ரவி. இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது,

எனவே, புதிய சட்டம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றமே கூறி இருக்கிறது. இணையதள சூதாட்டத்திற்கு சட்டமன்றம் புதிய சட்டம் ஏற்றலாம் என நீதிமன்றமே கூறியிருக்கிறது.

இதை ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை. எனவே ஆளுநர் நிராகரித்து இருப்பதற்கு என்ன கூறியிருக்கிறார் என்பதனை அவர் அனுப்பி உள்ள கோப்புகளை பார்த்துவிட்டு நிச்சயமாக அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதில் கூறுவார்.

இந்த சட்டம் என்பது இரண்டாம் முறையாக நிராகரிக்கவில்லை. இது முதல் முறை தான் இதற்கு முன்பாக அந்த சட்டத்தின் தொடர்பான சில கேள்விகளை கேட்டு அனுப்பினர். அதன் பின்னர் நாங்கள் சட்டமன்றத்தில் இயற்றிய புதிய சட்டத்திற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தாக வேண்டும் மறுப்பதற்கு வாய்ப்பில்லை.

திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

MUST READ