Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி மாணவிகளுடன் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து- டிரைவர் பலி

பள்ளி மாணவிகளுடன் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து- டிரைவர் பலி

-

- Advertisement -

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.

death

we-r-hiring

கமுதி அருகே உள்ள இடச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவிகள் கமுதி தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் எப்போதும் தனியார் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அதேபோல
இன்று காலை ஆட்டோவில் பள்ளிக்கு வரும்போது காட்டுப்பன்றி குறுக்கே சென்றதை அடுத்து அதன்மீது மோதாமல் இருக்க ஆட்டோவை ஓட்டுநர் திருப்பியபோது, ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது.

Home

உடனடியாக அருகில் இருந்தவர்கள், விபத்தில் காயமடைந்த டிரைவர் மருதுபாண்டி மற்றும் ஏழு மாணவிகளை கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆட்டோ டிரைவர் மருதுபாண்டி உயிரிழந்தார். 6 ஆறு மாணவிகள் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று பள்ளிக்கு சென்றனர். ஒரு மாணவி மட்டும் முகத்தில் காயம் பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கமுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ