Homeசெய்திகள்தமிழ்நாடு'ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!'

‘ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!’

-

 

'ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!'

தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அனிருத்தின் இசையை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆவடி சின்னம்மன் கோவில் அருகே போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பேரணி மூர்த்தி நகர், பருத்திப்பட்டு, அய்யன்குளம் வழியாக கல்லூரி வரை சென்றது.

பேரணியில் மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பாதாகைகளை கையில் ஏந்தியபடி, வாசகங்கள் சொல்லிக் கொண்டு 5 கிலோ மீட்டர் வரை நடைப்பயணமாக பொதுமக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

பின்பு மாணவ, மாணவிகளிடம் போக்குவரத்து ஆய்வாளர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேசும் போது, “கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களிடம் இந்த தகவல்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனங்கள் ஓட்டி செல்லும் பொழுது கட்டாயம் கைபேசி உபயோகப்படுத்தக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது” என்று கூறினார்.

அனிருத்தின் இசையை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள்

முன்னதாக, பேரணியின் போது மாணவர்கள் வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜேந்திரகுமார், விஜி ராய் மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

MUST READ