spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுதபூஜையையொட்டி, பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு!

ஆயுதபூஜையையொட்டி, பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு!

-

- Advertisement -

 

ஆயுதபூஜையையொட்டி, பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு!
File Photo

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தமிழகத்தின் முன்னணி மலர் சந்தைகளில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் என்பதால், பூக்கள் விற்பனை களைக்கட்டத் தொடங்கியது.

we-r-hiring

டிஜிட்டலில் ரீ-ரிலீஸாகும் நாயகன் திரைப்படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால், பிச்சி பூ ஒரு கிலோ 200 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும், மல்லிகை பூ 450 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாகவும், ரோஜா 70 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது!

மலர் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா வியாபாரிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மலர் சந்தையில் ஆயுதபூஜையை முன்னிட்டு, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்பதால், திண்டுக்கல் மலர் சந்தைக்கு 40 டான் அளவில், பூக்கள் விற்பனைக்காக வந்துள்ளது.

MUST READ