
பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள ராமானுஜர் கோயில் தெருவில் உள்ள விடுதிக்கு அருகில் குப்பைக் கொட்டும் இடம் உள்ள நிலையில், அந்த பகுதியில் குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த யுவராணி என்ற பெண் குப்பைத் தொட்டியில் எறும்பு மேய்ந்த நிலையில், தொப்புள் கொடியுடன் பெண் பச்சிளம் குழந்தையை மீட்டார்.
பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக குப்பைத் தொட்டியில் போராடி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த குழந்தைக்கு அந்த பெண் அதிர்ஷ்டலட்சுமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற தீர்ப்பு மிகச்சரியானது – ராமதாஸ்
இதற்கிடையில், தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசி சென்ற நபர்கள் யார் என்பதைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், நிகழ்விடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.