spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாமல்லபுரத்தில் வாகன நிறுத்த ஊழியர் மீது சரமாரி தாக்குதல்... 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர்...

மாமல்லபுரத்தில் வாகன நிறுத்த ஊழியர் மீது சரமாரி தாக்குதல்… 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

-

- Advertisement -

மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங்கில் கார் நிறுத்தும் விவகாரத்தில் ஊழியரை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தையொட்டி அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சொகுசு கார் ஒன்று வந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர் காரை மறித்து பார்க்கிங்கில் நிறுத்துமாறு கூறினார். எனினும் காரில் இருந்த பயணிகள் தாங்கள் ஐந்து ரதத்தை கடந்து சென்னைக்கு செல்வதாக கூறி காரை நிறுத்தாமல் நோ பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளனர்.

we-r-hiring

இதனால் அந்த ஊழியர் காரில் இருந்தவர்களை கண்டித்ததாக தெரிகிறது. அப்போது காரில் இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் வாகன நிறுத்த ஊழியரை சரமாரியாக தாக்கினர். அப்போது, பெண் ஒருவர் ஊழியர் வைத்திருந்த பிளாஸ்டிக் பைப்பை எடுத்து அவரை கடுமையாக தாக்கினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வீடியோ காட்சி அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை கண்டறியவும், அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ