அன்னூர்- குரும்பபாளையம், விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த அபுவின் மனைவி ஷாமிளா. எம்.இ.,பட்டதாரி.


இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டினர். அதில் மற்ற கோழிகளை விட நாட்டு கோழியின் முட்டை மிகவும் சத்தானதாக இருக்கும். மேலும் இயற்கை மேய்ச்சல் இருப்பதால் இதில் அனைத்து வித விட்டமின்களும் இருக்கும் என்பதால் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டனர். 5 வித ரக நாட்டுக்கோழிகளை வளர்த்து தங்களது குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை என கொடுத்து வந்தனர். இதனால் அவர்களுக்கு மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் வந்தது.
இதனால், தனது வீட்டிலேயே கூண்டுகள் அமைத்து கணவரின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட கோழி மற்றும் சேவல்களை வளர்த்தனர். இவர் வளர்த்து வரும் கோழிகளுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் சத்தான தானியங்களை கொடுத்து வளர்த்தனர். இதனால் இவர்கள் வளர்த்து வரும் நாட்டுக்கோழி முட்டைகளை பலர் வீடு தேடி வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஷாமிளா- அபு தம்பதியினர் வளர்த்து வரும் கோழிகளில் ஒரு கோழி வழக்கத்திற்கு மாறாக நீளம், அகலம் மற்றும் எடை என அனைத்துமே அதிக அளவில் கொண்ட பெரிய அளவிலான முட்டையை போட்டுள்ளது.
சாதாரணமாக கோழி முட்டையின் எடை 40 கிராம் முதல் 50 கிராம் வரை இருக்கும். ஆனால், எங்கள் கோழி முட்டையின் எடை 90 கிராமாக இருந்தது எனவும் நீளம் 8.1 இன்ச், சுற்று வட்ட அளவு 6.1 இன்ச் இருந்தது என்றும் ஷர்மிளா கூறுகிறார். தினமும் அதே அளவில் முட்டையிட்டு வரும் அதிசய நாட்டுக்கோழியின் முட்டையின் எடை உள்ளிட்ட அளவீடு தொடர்பாக ஓல்டு வைடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-இல் இடம்பெற விண்ணப்பித்தேன். அதில் உலகிலேயே மிகப்பெரிய கோழி முட்டைக்காக எங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஷர்மிளா.
