spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி"- சரத்குமார் அறிவிப்பு!

‘மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி”- சரத்குமார் அறிவிப்பு!

-

- Advertisement -

 

'மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி"- சரத்குமார் அறிவிப்பு!

we-r-hiring

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

சனாதன சர்ச்சை- வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!

இது குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் அவர்கள் பிப்ரவரி 28- ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (மார்ச் 05) மத்திய அமைச்சர் முருகன், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.ராஜா, பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

‘நாங்கள் நலமாக இல்லை’- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ