Homeசெய்திகள்தமிழ்நாடுசனாதன சர்ச்சை- வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!

சனாதன சர்ச்சை- வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!

-

 

udhayanidhi stalin tn assembly

‘சனாதனம்’ தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீதான வழக்குகளை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு பங்கேற்றது மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீது இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக, எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்குகள் தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த இன்று (மார்ச் 06) பிற்பகல் 02.30 மணிக்கு தீர்ப்பளித்துள்ளார். அப்போது நீதிபதி குறிப்பிட்டதாவது, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு; மனுதாரர் கோரிக்கைகள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டாலும் அதில் எதிலும் தண்டிக்கப்படவில்லை.

‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எதன் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார்கள் என கேட்க முடியாது” என்று கூறி, வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ