spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆசிரியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…

மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆசிரியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…

-

- Advertisement -

சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஏற்படுத்துவதுடன், சமூக நீதி மற்றும் பகுத்தறிவை பயிற்றுவிக்க வேண்டும் – துணை முதலமைச்சர்.மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆரிசியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிக் கல்வி துறை சார்பில்  டாக்டர் இராதகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும், தொடக்க நடுநிலை ,உயர்நிலை ,மேல்நிலை ,மெட்ரிகுலேசன் , ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்,மாநிலக் கல்வியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ,சமூக பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து  396 சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை துணை முதலமைச்சர்  வழங்கினார். இந்த விருதுடன் ரூ.10,000 ரொக்கம் பணமும், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை / மாநகராட்சி / ஆதிதிராவிட நலத்துறையில் 2810 பணிநாடுநர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்வில் முதற்கட்டமாக 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு துணை முதலமைச்சர் பணிநியமன ஆணையும் வழங்கினார்.

we-r-hiring

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  பி.கே.சேகர்பாபு, அரசு முதன்மைச் செயலர் .சந்திரமோகன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா , மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆரிசியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…

நிகழ்ச்சிக்கு முன்னதாக ஆசிரியர் தினத்தையொட்டி மேடையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவபடத்திற்கு துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்ததோடு முதலமைச்சரின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தியை அமைச்சர் அன்பில் மகேஸ் மேடையில் வாசித்தார்.

முதலமைச்சர் செய்ய கூடிய வேலையில் பாதி வேலையை பார்க்கூடிய துணை முதலமைச்சர்  இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருப்பது மகிழ்ச்சி. அத்தி பூத்தார் போல் குறைவாக மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில் உயர்கல்வியில் 1828 பேர் சேர்வதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டு ஆசிரிய பெருமக்களுக்கு இணையாக உலகில் எங்கும் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறிய அன்பில், 4 நாட்களாக குழந்தை தொலைந்தது போல நீங்கள் உணரலாம், கவலைப்படாதீர்கள், இது கலைஞரின் ஆட்சி. ஒட்டு மொத்த இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக இருப்பதாக TET தேர்வு சம்பந்தமாக பேசியவர், நம்மை பார்த்து கர்நாடகா  நேற்று  மாநில கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. உற்ற தோழனாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள். சமுதாயத்தை உயர்த்த உங்களுக்கு ஏணியாக இந்த விருது வழங்கப்படுவதாகவும், கலைஞரின் பேரனான துணை முதலமைச்சரின் கையால் விருது பெறும் நீங்கள், கலைஞரின் கையாலேயே விருது பெறுகிறீர்கள், என தெரிவித்தார்.மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆரிசியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…

தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவருக்கும் முதலில் ஆசிரியர் தின வாழ்த்துகள் ( Happy teachers day) தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டு இதே ஆசிரியர் தினத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் என்னை அழைத்திருந்தார் ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை வைத்து இருந்தீர்கள், பல கோரிக்கைகள் நம்முடைய முதலமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார், சில கோரிக்கைகளை நீங்களே மறந்திருந்தாலும், நிச்சயமாக உங்கள் கோரிக்கை அனைத்தும் நம்முடைய முதலமைச்சர் நிறைவேற்றிக் காட்டுவார்.

அதில் உங்களுடைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பணிகளை சிறப்பாக செய்வார் என்ற உறுதி மொழியை இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பொதுவாக வகுப்பில் ஒரு சில ஆசிரியர்கள் பார்க்கின்ற போது பயம் வந்துவிடும் ஆனால் இன்றைக்கு ஒரே அரங்கத்தில் கிட்டத்தட்ட 400 ஆசிரியர்கள்  உன்றாக பார்க்கின்றபோது பயம் மட்டுமல்ல கொஞ்சம் பதட்டமாக உள்ளது. நீங்கள் சாதாரணமான ஆசிரியர்கள் கிடையாது, ஆசிரியர்களுக்கு எல்லாம் சிறந்த ஆசிரியர்கள். உங்கள் முன் பேசும் போது அளந்து பார்த்து கவனமாக  பேச வேண்டும் சூழலில் நான் உள்ளேன்.

நம்முடைய திராவிட  இயக்கத்திற்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதுமே மிக நெருங்கிய தொடர்பு உண்டு தந்தை பெரியார்  அவர்களை மிகப் பெரிய ஒரு ஆசிரியர் பகுத்தறிவுக்கு ஒரு ஆசிரியர்,  சுயமரியாதைக்கு ஆசிரியர் மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு ஆசிரியர் அப்படிப்பட்ட ஒரு ஆசிரியருக்கு தான் நேற்று லண்டனில் நம்முடைய முதலமைச்சர் பெரியார் அவர்களுடைய திருஉருவப்படத்தில் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெரியார் சொந்தமானவர் என நம் முதலமைச்சர்  நிரூபித்து காட்டியுள்ளார்.மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆரிசியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…அதேபோல் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருடைய முதல் பணி பள்ளி ஆசிரியராக துவங்கிய பிறகு தான், மக்கள் பணிக்கு வந்தார். அதேபோல் கலைஞர் அவர்கள் மாணவராக இருந்தபோதே மாணவர் நேசன் என்ற பத்திரிக்கையை தொடங்கி சாதாரண பத்திரிகை அல்ல கையெழுத்து பிரதி அதற்கு ஆசிரியராக இருந்தவர் நம்முடைய கலைஞர் தான். முரசொலி ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் முரசொலிக்கு ஆசிரியராக இருந்தவர் நம்மளுடைய கலைஞர் அவர்கள்.

இன்றைக்கு எங்களுடைய தாய் கழகத்தினுடைய தலைவர் கி.வீரமணி ஐயா அவர்களை ஆசிரியர் என்று தான் நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திராவிட மாடல் என்கிற மிகப்பெரிய தத்துவத்தோடு மிகச்சிறந்த ஆசிரியராக  செயலாற்றி கொண்டிருக்கின்றார்..

அதனால்தான் உங்களுடைய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எப்போதும் பேசும்போது சொல்வார் முதலமைச்சர் அவர்கள் தான் எங்களுடைய ஹெட் மாஸ்டர் நாங்க எல்லாம் அவருக்கு ஸ்டுடென்ட்ஸ் அப்படி என்று பெருமையாக சொல்வார்.

ஒரு காலத்தில் கிராமத்திற்கு போனால் இது தான் வாத்தியார் வீடு அப்படி என்று பெருமையாக சொல்வார்கள் ஆனால் தற்போது கிராமத்திற்கு போனால் இது டாக்டர் வீடு, நீதிபதி வீடு என்று சொல்கிறார்கள் அந்த அளவிற்கு கல்வி கிராம புறத்தித்கு சென்றடைந்துள்ளது.

இத்தனை வீட்டிற்கு கல்வி போய் சேர்வதற்கு காரணம் முதல் முதலில் அந்த கிராமத்திற்கு வந்த அந்த வாத்தியார் வீடுதான். ஏனென்றால் ஆசிரியர்கள் நீங்கள் தான் அந்த டாக்டர் உருவாக்கி உள்ளீர்கள் இன்ஜினியரை உருவாக்கியுள்ளீர்கள் இன்னும் சொன்னால் என்னை போன்ற ஒரு அரசியல்வாதியையும் நீங்கள் தான் உருவாக்கி உள்ளீர்கள்.மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆரிசியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…

சமூக மாற்றத்தை கல்வி மூலமாகத்தான் மாற்ற முடியும் என்று சொல்வார்கள்.   அப்படிப்பட்ட வலிமையான கல்வியை மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கின்ற இங்கே வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு ஆசிரியர்களும் புரட்சியாளர்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆகவே தமிழ்நாட்டோடு மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். மாணவர்கள் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும் அதற்கு நீங்கள் வழி நடத்த வேண்டும் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். எதையுமே ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க மாணவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும், சமூக நீதியை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர் புதிய கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கை என்று வெளியிட்டார்கள். தமிழ்நாட்டில் எந்நாளும் மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க முடியாது,  இரு மொழி கொள்கையை போதும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருடைய காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிய கல்வி திட்டம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு திட்டங்களுக்கும்  வெற்றிக்கு காரணம் ஆசிரியர்கள் நீங்கள்தான்.மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆரிசியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…பள்ளிக்கல்வியை நீங்கள் சரியாக சொல்லிக் கொடுத்ததனால் மட்டுமே இன்றைக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 75 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விக்கு போகிறார்கள். இந்த 75 சதவீதம் 100 சதவீதமாக மாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சராக நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன்.  கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் தயவு செய்து பி.டி பீரியடை(P.T.Period)  கடன் வாங்கி கணிதம், அறிவியல் பாடத்தை நடத்தாதீர்கள். நம்மளுடைய மாணவர்களை விளையாட்டு வகுப்பில் தயவு செய்து விளையாட அனுமதியுங்கள்.

மேலும், இன்றைக்கு ஒரு சிறப்பான ஒரு அறிவிப்பு. நம்மளுடைய முதலமைச்சர் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன்  அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது இது ஆசிரியர்களான உங்களுக்கான பெருமை. என்றார்.

பாஜக – அதிமுக கூட்டணி ஒரு மூழ்குகின்ற கப்பல்..! – செல்வப்பெருந்தகை விமர்சனம்

MUST READ