மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக சுகந்தி ராஜகுமாரியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.சுகந்தி ராஜகுமாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் ஆவார். இவர் கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் டீனாக பணியாற்றியுள்ளார். மேலும் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனராகவும் பதவி வகித்துள்ளார். 2021-ல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மாவட்ட ஆட்சியரை சந்திக்காததால், அவமதிக்கப்பட்டதாகக் கூறி விருப்ப ஓய்வு பெற்றார்.
சுகந்தி ராஜகுமாரி சமீபத்தில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக இருந்த சங்குமணி ஓய்வு பெற்றுள்ள நிலையில் காலியாக இருந்த பொறுப்புக்கு சுகந்தி ராஜகுமாரியை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக – அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்
