spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக - அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக – அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

-

- Advertisement -

மூழ்கும் கப்பலான பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவரும் வெளியேறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக - அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர். ராதாகிருஷ்ணனின் 137-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களது திருவுருவப்படத்திற்கு செல்வப்பெருந்தகை மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

we-r-hiring

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “தேச நலனுக்காகவும் சுதந்திர காற்றை சுவாசிக்கவும் தன் வாழ்க்கையே அர்ப்பணித்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றையும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மிக உயரிய பதவியான குடியரசு தலைவர் வரை உயர்ந்த டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும் இப்போதுள்ள சந்ததியினர் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திர நாட்டில், இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட உரிமைகளை பறிக்கின்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

நாளை மறுநாள் வாக்குத்திருட்டு, வாக்கு அதிகாரம் என்ற மாநாடு காங்கிரஸ் கட்சி நடத்துவதை குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் அதில் பேச உள்ளதாக கூறினார்.

இந்த மாநாடு தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பாஜக-அதிமுக கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர் என்றும் இதை கவனித்துக் கொண்டிருந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியே வந்துவிட்டார் என்றும் செல்வப்பெருந்தகை பேசினார். ஓ.பி.எஸ். வெளியே வந்துவிட்டார் என்றும் இன்னும் யாரெல்லாம் வெளியே வரப் போகிறார்கள் என தெரியவில்லை என்றும் அவர் குறை கூறியுள்ளாா். மூழ்கின்ற கப்பலாக உள்ள பாஜக-அதிமுக கூட்டணியில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொருவராக வெளியே வருவதாக அவர் விமர்சித்துள்ளாா்.  தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜக அதிமுக கூட்டணியை ஏற்க மாட்டார்கள் என்பதே எதார்த்தமான உண்மை.

இன்றும் நமது தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி பணத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை என்றும் இதேபோல் பேரிடர் நிதி, பள்ளி கல்வித்துறைக்கு வரவேண்டிய நிதி ஆகியவற்றை கொடுக்காமல் உள்ளதற்கும் அவர் சாடியுள்ளாா்.  ஜனநாயகத்திற்கு எதிரான செயல் செய்யும் பா.ஜ.க.வை கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டே டி.டி.வி தினகரனை தொடர்ந்து, செங்கோட்டையனும் வெளியே வந்துள்ளார் என செல்வப்பெருந்தகை கூறிப்பிட்டுள்ளாா்.

ஆகையால் மக்கள் பாஜக-அதிமுக கூட்டணி மூழ்குகின்ற கப்பலாக உள்ள நிலையில், அதில் ஏறவும் வேண்டாம் இறங்கவும் வேண்டாம் என்று ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

உறவாடி கெடுக்கும் ஒரு கட்சிதான் பாஜக என்றும் ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சித்து விளையாட்டை நடத்தியுள்ள பா.ஜ.க., இப்பொழுது அதிமுகவில் சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா். ஆகவே அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும் என்றாம் விழித்துக் கொள்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூர், ஈரோடு தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வணிகம் குறைந்து மக்கள் சிரமப்படுவதை விளக்கியதோடு, 10 வருடங்களுக்கு முன்பே ஜி.எஸ்.டி வரி விதிப்பை குறைக்க ராகுல்காந்தி வலியுறுத்தியதை குறிப்பிட்டு, இப்போதுதான் ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளதாகவும் செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டியுள்ளாா்.

மாஸ் காட்டினாரா சிவகார்த்திகேயன்?…. ‘மதராஸி’ பட திரை விமர்சனம்!

MUST READ