spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அப்பாவும் மகனும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் - ஜி.கே.மணி உறுதி

அப்பாவும் மகனும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் – ஜி.கே.மணி உறுதி

-

- Advertisement -

அன்புமணியும் ராமதாஸும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.அப்பாவும் மகனும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் - ஜி.கே.மணி உறுதி

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியஅவர், அன்புமணியும் ராமதாஸும் நாளையே ஒன்றிணைந்தால், நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் எந்தப் பதவியிலும் இருக்க மாட்டார்கள். கட்சியிலிருந்தே நாங்கள் விலகத் தயாராக இருக்கிறோம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

we-r-hiring

1980-ம் ஆண்டு முதல் சமூகநீதியை உயிர்மூச்சாகக் கொண்டு பாமகவை வளர்த்தவர் மருத்துவர் ராமதாஸ் என குறிப்பிட்ட ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக பாமக உருவாக காரணம் ராமதாஸ்தான் என்றார்.

21 ஆண்டுகளாக வரைவு நிதிநிலை அறிக்கைகளை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வெளியிட்டவர் ராமதாஸ் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். 46 ஆண்டுகளாக ராமதாஸுடன் இணைந்து அரசியல் பயணம் செய்ததாக கூறிய ஜி.கே.மணி, பலமுறை சிறை சென்ற அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார்.

பாமகவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணம் அனைவருக்கும் தெரியும் என்றும், ராமதாஸ் பெற்று வளர்த்து, மத்திய அமைச்சராக்கிய அன்புமணியால்தான் இந்த சோதனை ஏற்பட்டுள்ளது என்றும் ஜி.கே.மணி குற்றம்சாட்டினார்.

ராமதாஸ் தொலைக்காட்சி முன்பு கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும், அவரை குறித்து குழந்தையாகிவிட்டார், மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டார் என அன்புமணி கூறிய குற்றச்சாட்டுகள் மிகவும் அநாகரீகமானது.

ராமதாஸ் ஆரம்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் அரசுப் பதவிக்கு வரக் கூடாது என்று உறுதியளித்திருந்ததாகவும், அன்புமணியை மத்திய அமைச்சராக்க குடும்பத்தினர் பலமுறை முயன்றும் ராமதாஸ் மறுத்ததாகவும், அந்த நேரத்தில், ராமதாஸின் மனதை மாற்றி அன்புமணியை மத்திய அமைச்சராக்க பேசியவன் நான்தான் என்றும் அவர் கூறினார்.

மேலும், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கலைஞர் வழங்க முன்வந்தபோது, அதையும் அன்புமணிக்காக விட்டுக் கொடுத்ததாக ஜி.கே.மணி தெரிவித்தார்.

தன்னை மற்றும் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை அன்புமணி துரோகிகள் என கூறுவது மன வேதனை அளிக்கிறது என்றாா்.  அப்பா – மகனை பிரிப்பவன் நான் அல்ல. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

அன்புமணி, அப்பாவுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று கூறினாலே அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்றும், தனியாக செயல்படுவது அவருக்கே பலவீனமாக முடியும் எனக் கூறினாா்.

அன்புமணி ஊர் ஊராக சுற்றினாலும், மக்கள் செல்வாக்கு ராமதாஸுக்கே உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அவர் சொன்னால் தான் தொண்டர்கள் கேட்பார்கள். ராமதாஸும் அன்புமணியும் ஒன்றிணைந்த பிறகும், அன்புமணி என்னையும் மற்றவர்களையும் துரோகிகள் என்று கூறினால், நான் என் மகனுடன் சேர்ந்து கட்சியை விட்டு வெளியேறுவேன். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்கிறேன். வேறு எந்தக் கட்சியிலும் சேர மாட்டோம் என ஜி.கே.மணி உறுதியாக தெரிவித்தார்.

தேர்தல் எதிரொலி… 6 கோடி பாமாயில், 60 ஆயிரம் டன் பருப்பு, சர்க்கரை ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு…

MUST READ