spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என நிரூபித்துவிட்டார் - சசிகலா..!

செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என நிரூபித்துவிட்டார் – சசிகலா..!

-

- Advertisement -

சசிகலா - செங்கோட்டையன்

தன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துவிட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்கு மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், செங்கோட்டையனின் பேச்சுக்கு சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை எளிய சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் குளுரைத்தது போல் “இன்னும் 180ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்”.

அதிமுக எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் அவர்கள் திருபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் திரு செங்கோட்டையன் அவர்கள் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தாள் என்பதை திரு செங்கோட்டையன் அவர்கள் நிரூபித்துள்ளார், கழகம் ஒன்றுபட வேண்டும் என திரு செங்கோட்டையன் அவர்களின் கருந்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருந்து தமிழக மக்களின் கருத்தும் இதுதான் நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

பிரிந்தவர்களை இணைக்க 10 நாட்கள் காலக்கெடு - செங்கோட்டையன்

அன்பு சகோதரர்திரு செய்கோட்டையன் அவர்களைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகளின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாந்து வெள்ளம் போன்றது இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, நிறுக என்ற தீயசக்தி நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாகில் கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும். செறுகிகோடும் மிளிரும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! நாளை நமதே’ வெற்றி நிச்சயம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ