தேசிய அளவில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. மொந்த வாக்காளர்களில் தமிழகத்தின் பங்கு 5.45 சதவீதம் ஆகும்.இந்தியாவின் மக்கள் தொகை
கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 ஆகும். இது முந்தைய 2001-ம் ஆண்டு மக்கள் தொகையை விட 17.7 சதவீதம் அதிகம். அதாவது ஆண்டுக்கு 1.77 சதவீத வளர்ச்சி. இப்போது அதே சதவீத அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் மக்கள் தொகை 2025-ல் 154 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு, மக்கள் தொகை வீழ்ச்சி காரணமாக 1.1 சதவீதம் என்ற அடிப்படையில் தான் கணக்கிடுகிறது. அதன்படி பார்த்தால், இப்போது இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 141 கோடி பேர். அதேவேளையில் தற்போது தோ்தல் கமிஷன் 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த வாக்காளர் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்த வாக்காளர்கள் 98 கோடியே 99 லட்சத்து 87 ஆயிரத்து 326 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 70.28 சதவீதம் பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். அதிக வாக்காளர்களில் நாட்டிலேயே முதல் இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. 2-ம் இடத்தில் மராட்டியம், 3-வது இடத்தில் பீகார், 4-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தேசிய அளவில் அதிக வாக்காளா்கள் கொண்ட மாநிலங்களில், இது மொத்த வாக்காளர்களில் 6.46 சதவீதம் அதிகம் குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 57 ஆயிரத்து 806 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தியாவின் மொந்த வாக்காளர் பட்டியலின்படி பெண்களை விட ஆண்கள் 2 கோடியே 30 லட்சத்து ஆயிரத்து 423 பேர் அதிகமாக உள்ளனர். ஆனால் ஆந்திரா, அருணாச்சலபிரதேசம், அசாம், பீகார், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் வாக்காளர்கள் தான் அதிகம் இருக்கிறனர். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது 84 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 2004-ம் ஆண்டில் 96 கோடியே 86 லட்சம் வாக்காளர்களும் இருந்தனர். அதாவது 10 ஆண்டுகளில் 12 கோடியே 46 லட்சம் வாக்காளர்கள் அதிகம். கடந்த 2004-ம் ஆண்டு வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது, இப்போது 2 கோடியே 13 லட்சம் வாக்காளா்கள் அதிகமாகி உள்ளனர். தற்போது பீகாரில் மட்டும் எஸ்.ஐ.ஆர், என்ற சிறப்பு தீவிர சுருக்க வாக்காளர் திருத்தப்பணிகள் நடந்து முடிகிறது. அங்கு இறந்தவர்கள், இடமாற்றம் செய்வதவர்கள் என 65 லட்சம் பெயா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை குறையம்பட்சத்தில் தேசிய வாக்காளா் பட்டியலிலும் எண்ணிக்கை குறையும். பீகாா் போலவே மற்ற மாநிலங்களிலும் இந்த திருத்தப் பணிகள் மேற்கொண்டால் இறந்தவா்கள் பெயா்கள் நீக்கப்படும் வாய்ப்பு ஏற்பட உள்ளது. அப்போது மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை குறையலாம். அதேவேளையில் புதிய வாக்காளா்களை சோ்க்கும் பட்சத்தில் எண்ணிக்கை சரிவ தடுக்கப்படும்.
இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை | ||||
மாநிலம் | ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளா்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் வாக்காளா்கள் |
ஆந்திரா | 2,03,23,370 | 2,11,25,219 | 3,401 | 4,14,52,000 |
அருணாச்சல பிரதேசம் | 4,37,545
| 4,54,014
| 2
| 8,91,802
|
அசாம் | 1,25,20,769 | 1,25,72,797 | 396 | 2,50,93,952 |
பீகாா் | 3,82,58,141 | 3,41,54,746 | 1,810 | 7,24,14,697 |
கோவா | 5,73,548
| 6,10,728
| 13
| 11,84,289
|
குஜராத் | 2,59,96,226 | 2,47,55,353 | 1,655 | 5,07,53,234 |
அாியானா | 1,09,40,262 | 97,78,651 | 469 | 2,07,19,982 |
இமாச்சலப் பிரதேசம் | 28,66,287
| 28,14,770
| 37 | 56,81,094
|
கா்நாடகா | 2,76,49,192 | 2,78,03,826 | 5,141 | 5,54,58,159 |
கேரளா | 21,34,30,674 | 1,43,83,504 | 361 | 2,78,14,539 |
மத்திய பிரதேசம் | 2,93,68,863 | 2,79,71,039 | 1,230 | 5,73,41,132 |
மராட்டியம் | 5,07,67,256 | 4,79,50,568 | 6,362 | 9,87,24,186 |
மணிப்பூா் | 9,99,871 | 10,70,404 | 284 | 20,70,559 |
மேகாலயா | 11,36,330 | 11,68,114 | 6 | 23,04,450 |
மிசோரம் | 4,22,131 | 4,50,183 | – | 8,72,317 |
நாகாலாந்து | 6,69,163 | 6,76,450 | – | 13,45,613 |
ஒடிசா | 1,72,85,638 | 1,69,76,266 | 3,484 | 3,42,65,388 |
பஞ்சாப் | 1,12,77,220 | 1,02,04,985 | 754 | 2,14,82,959 |
ராஜஸ்தான் | 2,83,63,459 | 2,64,61,708 | 681 | 5,48,25,848 |
சிக்கிம் | 2,35,945 | 2,35,568 | 4 | 4,71,517 |
தமிழ் நாடு | 3,13,09,963 | 3,26,20,825 | 9,421 | 6,39,40,209 |
திாிபுரா | 14,52,767 | 14,43,339 | 69 | 28,96,175 |
உத்தரபிரதேசம் | 8,21,60,877 | 7,20,71,320 | 5,997 | 15,42,38,194 |
மேற்கு வங்காளம் | 3,88,66,877 | 3,76,96,079 | 1,774 | 7,66,64,730 |
சத்தீஷ்காா் | 1,04,70,917 | 1,07,41,098 | 738 | 2,12,12,753 |
ஜாா்க்கண்ட் | 1,32,83,044 | 1,31,57,796 | 487 | 2,64,41,327 |
உத்தரகாண்ட் | 44,09,700 | 41,11,909 | 303 | 85,21,912 |
தெலுங்கானா | 1,67,43,972 | 1,69,97,128 | 2,878 | 3,37,43,978 |
அந்தமான் | 1,61,451 | 1,50,487 | 4 | 3,11,942 |
சண்டிகாா் | 3,33,708 | 3,12,970 | 35 | 6,46,713 |
தாத்ரா | 2,20,672 | 2,05,850 | 1 | 4,26,523 |
டெல்லி | 84,33,803 | 73,47,564 | 1,267 | 1,57,82,634 |
லட்சத்தீவு | 29,275 | 28,531 | – | 57,806 |
புதுச்சேரி | 4,76,814 | 5,41,686 | 161 | 10,18,661 |
ஜம்மு-காஷ்மீா் | 45,02,926 | 43,25,658 | 155 | 88,28,739 |
லடாக் | 94,233 | 39,527 | 3 | 1,87,763 |
மொத்தம் | 50,64,73,183 | 48,34,64,760 | 49,383 | 98,99,87,326 |
புதிய உச்சம்.. ரூ.80ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. மேலும் உயர வாய்ப்பு?