Homeசெய்திகள்தமிழ்நாடுரிவர்ஸ் கியருக்கு பதில் முதல் கியர் போட்டதால் விபத்து- சிறுவன் பலி

ரிவர்ஸ் கியருக்கு பதில் முதல் கியர் போட்டதால் விபத்து- சிறுவன் பலி

-

- Advertisement -

கோவையில் திரைப்பட சண்டை காட்சி போல் நடந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

accident

we-r-hiring

கோவை எம்சிஆர் காலனி போத்தனூர் பகுதியில் ராய்ஃபுதீன் (08) என்ற சிறுவன் சைக்கிள் ஓட்டிக்கொணு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.மூன்று முக்கு சாலை பகுதி வழியாக செல்லும் போது அங்கு கார் ஒன்று மெல்ல இயங்கிக்கொண்டிருந்தன. அப்போது சாலையை கடக்க சிறுவன் முயன்றிருக்கின்றார். ஆனால் எதிர்பாராத விதமாக கார் சிறுவன் மீது மோதியது.

இதனால் திரைப்பட ஸ்டண்டு காட்சி போல தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலத்த காயமடைந்தார். காயமடைந்த சிறுவன் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் எதிர்பாரா விதமாக சிறுவன் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். சிறுவன் ராய்ஃபுதினுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டு பலியாகியிருக்கின்றார். இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் காரை ஓட்டியவர் தனியார் நிறுவன அதிகாரி சயது முகமது என்று போலீஸாருக்கு தெரியவந்தது. ரிவர்ஸ் கியர் போடுவதற்கு பதிலாக முதல் கியர் போட்டதனால் விபத்து நடந்தது தெரியவந்தன. சாலையில் நடக்கும் ஸ்டண்ட் காட்சிகளை போன்று சிறுவன் கார் மோதி தூக்கி வீசபப்ட்ட விபத்து காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றன

MUST READ