spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!

-

- Advertisement -

 

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!
Video Crop Image

செங்கல்பட்டு- பரனூர் இடையே தண்டவாளத்தில் இருந்து சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயிலில் சுமார் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து தண்டையார்பேட்டைக்கு இரும்புப் பொருட்கள் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது.

we-r-hiring

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!

இதன் காரணமாக, சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு செல்லவிருந்த ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை உள்ளிட்ட புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

நடிகர் விஜய் சொன்ன ஒரு சொல்… மொத்தமாக மாறிப்போன விஜய் மக்கள் இயக்கம்!

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.

MUST READ