Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு

-

- Advertisement -

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் முறையீடு

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்துக்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில் இச்சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், அச்சட்டத்தினை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார்.

we-r-hiring

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு

தொடர்ந்து அம்முறையீட்டை காணொளி காட்சி வயிலாகக் கேட்ட நீதிபதிகள், அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப் படவேண்டும் எனவும், மேலும் அம்மனு முறையாக இருந்தால், நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், மேலும் அப்படி இல்லையெனில் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.

MUST READ