Homeசெய்திகள்தமிழ்நாடுசாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் -  கூட்டணி கட்சி தலைவர்கள்...

சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் –  கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை

-

 

சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் -  கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை

சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வு கண்டதற்கு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என்று விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் -  கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை

சாம்சங் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர்கள் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கோண்டார். அதற்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலத்தில் முதலதைச்சரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதன் பின்பு கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்துள்ளனர். அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், நான்கு அமைச்சர்களை வைத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம் எனவும் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளையும் முடித்து சங்கம் வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

 

இதை தொடர்ந்து பேசிய முத்தரசன், ஒரு நிறுவனம் நட்டம் அடைய வேண்டும் என்பது எங்களது விருப்பமில்லை. ஆனால் தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் முன்வைக்க தான் செய்வோம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் பொழுது வலியுறுத்தியதாகவும் மேலும் மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் விசிக சார்பாக முதலமைச்சரிடம் கொடுத்துள்ளோம் என்றும் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.

இந்த சந்திப்பின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

MUST READ