
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் நாளை (அக்.13) நடைபெறவுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!
தமிழகத்திற்கு 16 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு, கர்நாடகாவுக்கு பரிந்துரைச் செய்திருதிருந்தது. இந்த சூழலில், டெல்லியில் நாளை (அக்.13) மதியம் 02.00 மணிக்கு காவிரி மேலாண்மை கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளின் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அப்போது, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், மேட்டூர் அணை வறண்டு போய் உள்ளது என்றும், டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு அணையில் இருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறி, அதற்கான புகைப்படங்களை ஆதாரங்களாக, கூட்டத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளனர்.
இஸ்ரேலில் அவசரகால ஒருங்கிணைப்பு அரசு!
அதைத் தொடர்ந்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த உத்தரவிடுமா? அல்லது அதை விடக் கூடுதல் தண்ணீரைத் திறக்க உத்தரவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் விவசாயிகள் .