ஏப்ரல் 11-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
ஏப்ரல் 11 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் ஏப்ரல் 11ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசு மேகதாது அணை விவகாரத்தை நிச்சயம் ஆணைய கூட்டத்தில் ஏதாவது ஒரு வழியில் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரிப் படுகையின் மாதாந்திர/பருவகால மற்றும் வருடாந்த நீர் பங்கீடு பற்றியும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. வறண்ட தொட்டிகளுக்கு திருப்பி விடுவதற்கான தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு மீதும் விவாதம் நடத்தப்படும்
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாதப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.