- Advertisement -

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!
இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா அரசையும், தமிழக உரிமைகளைப் பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டாத தி.மு.க. அரசையும் கண்டித்து, வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில் கண்டன போராட்டம் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.