Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு... மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி...

தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

 

"மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6 ஆயிரத்து 362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, மத்திய  ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். மேலும், இந்த தொகை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆண்டுக்கு சராசரியாக ஒதுக்கீடு செய்த ரூ.879 கோடியை விட 7 மடங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரத்து 749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மேலும் நிலம் கையகப்படுத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மத்திய  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ