Homeசெய்திகள்தமிழ்நாடுநாடு முழுவதும் 11 அணைகள் மிக மோசமாக இருப்பதாக மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 11 அணைகள் மிக மோசமாக இருப்பதாக மத்திய அரசு தகவல்

-

- Advertisement -

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் 11 அணைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடனடியாக சரி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அதில் இரண்டு அணைகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

dam

நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பருவமழைக்கும் முன்பாகவும் அதற்குப் பின்பாகவும் நாடு முழுவதிலும் உள்ள 3,930 அணைகளில் 3,919 ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதில், உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

முதல் கட்டம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டாவது கட்டம் சிறு சிறு பணிகளை செய்தால் போதும், சரி செய்தால் போதும் என மூன்றாம் கட்டம் பிரிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் ஒடிசாவில் 4 அணைகள், மத்திய பிரதேசத்தில் 3 ஆணைகள், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 அணைகள் என மொத்தம் 11 அணைகள் முதல் கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்ட பணிகள் முன்னுரிமை வழங்கப்பட்டு அது முடிக்கப்பட்டதற்கு பிறகு சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 மாநிலங்களில் உள்ள 736 அணைகள் சரி செய்யும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 59 அணைகள் சரி செய்யப்பட உள்ளது.

MUST READ