spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

we-r-hiring

இதனிடையே, சென்னையில் நேற்று நள்ளிரவில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. எழும்புர், திருவல்லிகேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, வடபழனி, அண்ணாநகர், வில்லிவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

MUST READ