Homeசெய்திகள்தமிழ்நாடுபிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை , விழுப்புரம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்யும்.

இதேபோல், தருமபுரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர்,  பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

MUST READ