spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக பாஜகவில் விரைவில் மாற்றம் - குஷியில் தமிழிசை

தமிழக பாஜகவில் விரைவில் மாற்றம் – குஷியில் தமிழிசை

-

- Advertisement -

தமிழ்நாடு அரசியல் மற்றும் மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்து  தமிழிசை சௌந்தர்ராஜனை நேரில் அழைத்து  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார்.

பாஜக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு அண்ணாமலையை மாற்றுவது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

we-r-hiring

தமிழக பாஜகவில் விரைவில் மாற்றம் - குஷியில் தமிழிசைபாரதீய ஜனதா கட்சி தலைமை அழைப்பின் பேரில் கடந்த 31ம் தேதி டெல்லி சென்ற தமிழிசை சௌந்தர்ராஜன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நீடித்த அந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசியல் நிலவரம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பாஜக தலைவர்கள் நியமனம் தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜனிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பாஜக தலைவர் நியமன பொறுப்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் குறித்து தமிழிசை, பாஜக தலைமையிடம் விளக்கியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் காலைக்கடன் கழிக்க சென்றவர் காட்டுயானை மிதித்து பலி!

மேலும் தன்னை சந்சித்த தமிழிசையிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்தும் கேட்டறிந்த ஜெ.பி.நட்டா, 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து உள்ளார். பாஜகவின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் நிறைவடைந்ததும், தமிழக அரசியலில் பாஜக அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் இருவரும்  பேசியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில்  அண்ணாமலை மாநில தலைவாக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மாநிலத் தலைவர் மாற்றம் செய்வது அவசியமா? என்பது குறித்தும் ஜெ.பி.நட்டா தமிழிசை சௌந்தர் ராஜனிடம் கேட்டு அறிந்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் நிலை மற்றும் எண்ணங்கள், தற்போதய அரசியல் நிலவரம் மற்றும் மாநில பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி எல்லாம் தமிழிசை பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜெ.பி. நட்டாவிடம் விளக்கமாக பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஜெ.பி.நட்டா மற்றும் தமிழிசை  சந்திப்பின் மூலம் தற்போது பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டாதக கூறப்படுகிறது.

பாஜக உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு மாநில தலைவரை மாற்றுவது தொடர்பான முடிவை பாரதிய ஜனதா தலைமை எடுக்கும் என்று கூறலாம்.

MUST READ