தமிழக அமைச்சரவையில் மாற்றம்?
மே 11, 12 ஆம் தேதி அல்லது ஜூன் மாதத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் மே 11, 12 ஆம் தேதி அல்லது ஜூன் மாதத்தில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் திட்டமிட்டு இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. வேலை செய்யாமல் இருக்கும் அமைச்சர்களுக்கு பதவி பறிப்பு இருக்கும் என்ற பரபரப்பு இருக்கிறது. திமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் பதவி பறிப்பு அல்லது இலாகா மாற்றம் இருக்கும் என்று தகவல் பரவுகிறது . நிதி அமைச்சர் பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோவால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பட்டியலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீர் நீக்கப்பட்டது. இறுதியாக வெளியிடப்பட்ட பட்டியலில் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்பார் என மாற்றப்பட்டுள்ளது