spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது...

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது – அமைச்சர் துரை முருகன்

-

- Advertisement -

செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் நீர்நிலைகளில் குப்பை கொட்டப்படுகின்றது என்று நீர்வளத்துரை அமைச்சர் துரை முருகன் நகைச்சுவையாக கூறியுள்ளாா்.

தமிழகம் ஆரஞ்சு எச்சரிக்கையில் இருந்தாலும் சரி, ஆப்பிள் எச்சரிக்கையில் இருந்தாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பானது - அமைச்சர் துரைமுருகன்

we-r-hiring

செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர் . அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து உபரி நீர் வெளியேற்றம், மற்றும் செட்டர்கள் குறித்து அதிகாரியிடம் அமைச்சர் கேட்டறிந்தார் .பின்பு செய்தியாளர்களை சந்தித்தவர் செம்பரம்பாக்கம் ஏரில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலட் அல்லது ஆப்பிள் அலட் விட்டாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது குறித்த கேள்விக்கு,  செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்ல வேலூர் பாலாற்றில் கூட குப்பை கொட்டப்படுகிறது என்றாா்.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மக்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் இதில் ஈடுபடுகிறார்கள். தண்டலம் சவிதா கல்லூரியில் இருந்தும் கழிவு நீர் கொட்டப்பட்டு வந்தது. அதனை தடுத்து நிறுத்தினால் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். அதிமுக வில் ஆளும் கட்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவார்கள் இல்லை என்றால் நானே எதிர்த்து கேட்பேன் என்றார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால் 100 பேரை என் வீட்டு அனுப்புகிறார் எம்.எல்.ஏ. நமது வாக்கு,நமது தொகுதி என்று பார்க்காமல் பணியற்ற வேண்டும். நான் என் மனசாட்சியோடு பணியாற்றுகிறேன் என்று கூறினாா்.

பாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது

MUST READ