spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல்!

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல்!

-

- Advertisement -

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

we-r-hiring

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் பயணி ஒருவர் வைத்திருந்த அட்டைப் பெட்டியை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அட்டை பெட்டிக்குள் 402 பச்சோந்திகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில் 402 பச்சோந்திகள் இருந்ததில் அதில் 67 பச்சோந்திகள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பச்சோந்தியை கொண்டு வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து எஞ்சிய 335 பச்சோந்திகளை அதே அட்டைப் பெட்டிகளில் வைத்து, விமானம் மூலம் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

MUST READ