Homeசெய்திகள்தமிழ்நாடுஇனிமேல் ஆப்பிள் போனிலும் Chennai Bus செயலி - அமைச்சர் தொடங்கி வைத்தார்

இனிமேல் ஆப்பிள் போனிலும் Chennai Bus செயலி – அமைச்சர் தொடங்கி வைத்தார்

-

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் Chennai Bus IOS செயலியை தொடங்கி வைத்தார்கள்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி வாகனம் இருப்பிடம் பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவை தெரியும் வகையில், “CHENNAI BUS” (APPS) என்ற ஆண்ட்ராய்டு செயலி 04.05.2022 அன்று துவங்கப்பட்டது. Chennai Bus & IOS version (Apple mobile) வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு இணங்க, இன்று (22.02.2024) முதல் செயலியை IOS version (Apple mobile) தெரியும் வகையில் செயலி துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் “CHENNAI BUS” (APPS) செயலி வாயிலாக பின்வரும் விவரங்களை தெரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.

1. நகரத்திற்கு புதிதாக வரும் மக்கள் தங்கள் இருப்பிடம் (LOCATION) அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்ததிற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்து விவரம் நேரப்படி அறிந்து கொள்ளவும், 2. மேலும் இந்த செயலி மூலம் தங்களது பயண திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள ஏதுவாகவும். 3.மேலும் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே ஒரு பொத்தான் (SOS) அழுத்தி தெரிவித்துக் கொள்ளும் வகையில் இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது. போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி,இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன், மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

MUST READ