மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் வெளியிட்டார்
சென்னையில் 2027ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், முதலமைச்சர் விஜய் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 2.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம் சென்னை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக பெரம்பூர் முதலிடத்தில் உள்ளது.
துறைமுகம் தொகுதியில் குறைந்த வாக்காளர்கள்
அதேவேளையில், சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1.20 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதி உள்ளது.
வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க அறிவுறுத்தல்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பெயர் விடுபட்டிருந்தாலோ, விவரங்களில் பிழைகள் இருந்தாலோ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள காலக்கெடுவுக்குள் உரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
சென்னையில் தீபாவளியன்று பட்டாசு விதிமீறல் – ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவு!
