spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் வாங்க உகந்த நேரம்! அதிரடி குறைவு

தங்கம் வாங்க உகந்த நேரம்! அதிரடி குறைவு

-

- Advertisement -

தங்கம் வாங்க உகந்த நேரம்! அதிரடி குறைவு

சென்னையில் இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக குறைந்துவருவது நகைப்பிரியர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது. இந்த அளவு தற்போது 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது. விலை சரிவை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினரும் தங்கத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைத்ததால் தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,485-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ