Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை? மழை எப்போது குறையும்?

சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை? மழை எப்போது குறையும்?

-

- Advertisement -

 

சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை? மழை எப்போது குறையும்?
Video Crop Image

மிக்ஜாம் புயலால் சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தத்தளிக்கும் தலைநகரம்… ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் தொடர்ந்து பல மணி நேரமாக கனமழை நீடித்த நிலையில், அதிகபட்சமாக பெருங்குடியில் பதிவாகியுள்ளது. அடையாறில் 24 செ.மீ. மழையும், மீனம்பாக்கம், புழல், நுங்கம்பாக்கம், சோழவரத்தில் தலா 23 செ.மீ. மழையும், பெருங்குடியில் 29 செ.மீ. மழையும், ஆவடியில் 28 செ.மீ. மழையும், ஆலந்தூரில் 25 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ முன்பக்கம் வெள்ளம் சூழந்ததால் ரோகிணி தியேட்டர் பகுதி வாயில் வழியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரும்பாக்கம் சாலைகளில் தண்ணீர் ஓடுவதால் மெட்ரோ நிலையத்தை அணுகுவதில் சிரமம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்ததால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் மூடல்… ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்த வேண்டுகோள்!

சென்னையில் இன்றிரவு முதல் மழை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு அல்லது நாளை காலை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

MUST READ