spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!

பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!

-

- Advertisement -

 

பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!
File Photo

புறநகர் மின்சார ரயில் இன்று (ஜூன் 11) காலை 09.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றது. அப்போது, பேசின் பிரிட்ஜ் அருகே சென்ற போது, மின்சார ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது. இதனால் மின்சார ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.

we-r-hiring

தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற பட்டணப் பிரவேஷ விழா!

இதை சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வேத்துறை ஊழியர்கள் ரயில் பெட்டியின் சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்மந்தப்பட்ட ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். மின்சார ரயில் பெட்டி தடம் புரண்டதால், அவ்வழியே மற்ற ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்ட்ரலில் இருந்து பணிமனைக்கு சென்ற சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக ரயில்கள் தடம் புரடும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ