

சென்னையின் லயோலா கல்லூரியில் அதிநவீன் ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமையவுள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு கிட்டும் பயன்கள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைப்பதற்காக மூவட் டெக்னலாஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் ரோபோடிக்ஸ் ஆய்வகம், கல்வித்துறைக்கும், தொழிற்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் என்கிறார் அந்நிறுவனத்தின் நிதிநிலை அலுவலர்.
கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…
இதன்மூலம் 600- க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மாணவர்கள் பயனடைவார்கள் என்று லயோலா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வகத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள், கூடுதலாக நவீன தொழில்நுட்பங்கள் குறித்து எளிதாக அறிந்துக் கொள்ளலாம். இந்த ஆய்வகத்தில் நவீன தொழில்நுட்பக் கருவிகள், கணினிகள், AI தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்படவிருப்பதால், மாணவ, மாணவிகள் கல்லூரியை முடித்து, பணிக்கு செல்ல எதுவாக இருக்கும் என்கிறார் கல்லூரி முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ்.
