Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா சாலையில் சுவர் இடிந்து பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் – மேயர்...

அண்ணா சாலையில் சுவர் இடிந்து பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் – மேயர் பிரியா

-

- Advertisement -

சென்னை மாநகராட்சியில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பொழுது அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3312 மாநகராட்சி ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகளில் ஆரம்ப நிலையில் கொசு புழுக்கள் உருவாகக்கூடிய நிலையில் இருக்கும் பொழுதே கொசு மருந்துகளை தெளித்து அதை ஆரம்ப காலத்தில் அழிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 412 கைத்த தெளிப்பான் 300 பேட்டரி மூலம் இயங்கும் கைத்தெளிப்பான்களும், 120 விசைத்தெளிப்பான்கள் மூலமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு சிஎஸ்ஆர் நிதி மூலம் 81 லட்சத்திற்கு 6 ட்ரோன் வழங்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் மூலம் 15 மீட்டர் வரை கொசு தெளிப்பான்களை தெளிக்க முடியும். மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ள உள்ளது” என்றார்.

சென்னையில் நேற்று 22 வயது பெண் கட்டிடம் விழுந்து பலியானது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சி இடம் அனுமதி வாங்கிவிட்டு தான் கட்டிடத்தை இடித்தார்கள், ஆனால் வழி காட்டு நெறிமுறைகளைக் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை. அது தனியாருக்கு சொந்தமான இடம், நாங்கள் கொடுத்த நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றாமல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் இது குறித்து நேற்றே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சியில் அனுமதி பெற்ற பின்பு தான் இது போன்ற கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனுமதி வழங்குவதற்கு முன்னதாக அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்படும். அண்ணா சாலையில் சுவர் இடிந்து பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்” எனக் கூறினார்.

MUST READ