spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!

சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!

-

- Advertisement -

 

File Photo

சென்னையை அடுத்த மறைமலைநகர், படப்பையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

we-r-hiring

‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!

சென்னை புறநகரில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (நவ.08) காலை அதிரடி சோதனை நடத்தினர். இதில், மறைமலை நகரில் நடத்தப்பட்ட சோதனையில் முன்னா மற்றும் அவருடன் தங்கியிருந்தவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

அதேபோல், படப்பைப் பகுதியில் போலி ஆதார் அட்டை கொடுத்து பணியில் சேர்ந்த ஷாகித் உசேன் என்பவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான மூன்று பேரிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மறைமலை நகரில் உள்ள கோவிந்தாபுரத்தில் டீக்கடை ஒன்றில் முன்னர் வேலை பார்த்து வந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் 3 பனியன் நிறுவனங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி, திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தெலங்கானா, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ