spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழை!

சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழை!

-

- Advertisement -

 

கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
File Photo

சென்னையில் மாலையில் இருந்து இரவு முழுவதும் பெய்த மழையால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

we-r-hiring

கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வுச் செய்தனர். மழைநீர் தேங்கி மக்கள் யாரும் பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தினர்.

சென்னையில் நேற்று (நவ.14) மாலை முதல் பரவலாக மழை பொழிந்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்டப் பகுதிகளில் இரவு முழுவதும் மழை பொழிந்தது. அதேபோல், புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்டப் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பொழிந்தது.

திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

இதன் காரணமாக, ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், இன்றும் பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ