
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாகை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளையும், அகற்றும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வுச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
“கூட்டுறவுச் சங்கங்களுக்கு உடனே தேர்தல்”- அண்ணாமலை கோரிக்கை!
கனமழை காரணமாக, ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.15) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.