
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோயம்பேடு வரை சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மழையால், சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக அளவில் இடி, மின்னலுக்கு வாய்ப்பு!
அதேபோல், சென்னை வாலாஜா சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் சாலையில் அதிகளவு தேங்கியிருப்பதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு/ வருகை என 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மழைநீர் இரண்டு அடிக்கு தேங்கியுள்ளதாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை!
அப்போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “மழை தொடர்பான புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். புயல் கரை கடந்துவிடும் என்பதால், நாளை விடுமுறை அறிவிக்க வேண்டிய தேவை இருக்காது” என்றார்.