spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுகைப்பட கலைஞர்களை படம் எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புகைப்பட கலைஞர்களை படம் எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

புகைப்பட கலைஞர்களை படம் எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு, புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் எடுத்து மகிழ்ந்தார்.

Image

காடுகள் முதல் வாழ்வியல் வரை – ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது புகைப்பட கலை. அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இன்றைய தினம் (ஆகஸ்ட் 19ஆம் தேதி) ‘உலக புகைப்பட தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. புகைப்படக்கலைஞர்கள் எடுப்பது வெறும் புகைப்படங்களை அல்ல. படங்களை தேடி அலையும் பெரும் பயணம் அது. அந்த பயணம்தான், சமூகத்தையும் வாழ்வையும் இயற்கையையும் நாம் அறிந்து கொள்ள உதவுகிறது.

we-r-hiring

Image

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்த பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை முதல்வர் புகைப்படம் எடுத்தார். தொடர்ந்து சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிகழ்வுகளை உறைய வைத்தும் – நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள் #WorldPhotographyDay” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ