spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசித்ரா பௌர்ணமி- திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில் இயக்கம்!

சித்ரா பௌர்ணமி- திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில் இயக்கம்!

-

- Advertisement -

 

சிறப்பு பேருந்து

we-r-hiring

சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கு இன்று (ஏப்ரல் 23) மற்றும் நாளை (ஏப்ரல் 24) சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

இன்று மற்றும் நாளை பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதேபோல், சித்ரா பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, இன்றும், நாளையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையே இன்று (ஏப்ரல் 23) மாலை 06.00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை- சென்னை கடற்கரைக்கு நாளை காலை 03.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

2026 இல் என்னை அரசியலுக்கு வர வைக்காதீங்க……. நடிகர் விஷால் பேச்சு!

இதனிடையே, சித்ரா பௌர்ணமியையொட்டி, தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

MUST READ