spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபத்திரிகையாளர்களுக்கு சம்மன்… முதல்வர் கண்டனம்…

பத்திரிகையாளர்களுக்கு சம்மன்… முதல்வர் கண்டனம்…

-

- Advertisement -

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.பத்திரிகையாளர்களுக்கு சம்மன்… முதல்வர் கண்டனம்…தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கு அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. “ஆப்ரேஷன் சிந்தூர்” குறித்த கட்டுரைக்காக தேசத்துரோக குற்றச்சாட்டில்  இரண்டு பேர் மீதும் அசாம் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறைக்கு தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த சம்மனில் ”உச்ச நீதிமன்றம் இருவருக்கும் பாதுகாப்பு அளித்த நிலையில் சம்மன் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. வழக்கு விவரம் எதுவும் அந்த சம்மனில் இணைக்கப்படவில்லை. மேலும் கைது செய்யப்படும் என்ற அச்சத்ததையும் ஏற்படுத்தியது. இது தேசத்துரோக சட்டம் என்பதால் ரத்து செய்யப்பட்ட அச்சட்டத்திற்கு பதிலாக பிஎன்ஸ் 152வது பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது. பிஎன்ஸ் 152வது பிரிவை தவறாக பயன்படுத்தி பத்திரிக்கையாளா்களின் ஊடக சுதந்திரம் முழுமையாக நசுக்க இச்செயல் அரங்கேறியுள்ளது என்றும் கேள்விகள் கேட்பது தேசத்துரோகம் என்றால் ஜனநாயகம் நிலைத்து நிற்க முடியாது” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

we-r-hiring

MUST READ