
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 25) காலை 11.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு சுதந்திரம் பெற்றதைக் குறிக்கிறது செங்கோல். ஆட்சிப் பரிமாற்றத்தைக் குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. செங்கோலை வடிவமைத்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கவுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டிய தொழிலாளர்களும் மரியாதை செய்யப்படவுள்ளனர். புதிய நாடாளுமன்றத் திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும். கடந்த 1947- ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட செங்கோல், தற்போது மக்களவையில் வைக்கப்படுகிறது.
மதம் சார்ந்து செங்கோல் வைக்கப்படவில்லை; திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு உள்ளது. குடியரசுத் தலைவர் மிகவும் உயர்ந்தவர்; அவரை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தெலங்கானாவில் கட்டி முடிக்கப்பட்ட தலைமைச் செயலகத்தை மாநில முதலமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல், சத்தீஸ்கரில் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் போல மாநிலங்களுக்கு ஆளுநர்.
நடுக்கடலில் நின்ற மர்ம படகு – சுற்றி வளைத்த போலீசார்
ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும். புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.