spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்நெல்லை மாநகர அதிமுக களஅய்வு கூட்டத்தில் வெடித்த மோதல்... முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் தாக்கிக்...

நெல்லை மாநகர அதிமுக களஅய்வு கூட்டத்தில் வெடித்த மோதல்… முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்!

-

- Advertisement -

நெல்லையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான வேலுமணி, முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார்.

we-r-hiring

பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு கீழ் தான் வாக்குகள் வாங்கியதாகவும் களப்பணி சரியாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார். தான் மாவட்ட செயலாளராக இருந்தபோது மற்ற நிர்வாகிகளை கலந்துபேசி தான் புதிய நிர்வாகிகளை நியமித்ததாகவும், ஆனால் தற்போதைய மாவட்ட செயலாளர் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கும்போது ஊரில் இல்லை, பொதுச்செயலாளரை சந்திக்க சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தபோது களத்தில் வட்ட செயலாளர் கூட இல்லாத நிலை இருந்ததாகவும்,  வாக்காளர் பட்டியலை சரியாக பார்த்து, இருக்கும் நபர்கள் யார் என்ன என்பதெல்லாம் பார்த்து பணியை வட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2026ல் எடப்பாடியை முதல்வராக்க தினமும் ஒரு மணி நேரமாவது உழைக்க வேண்டும் என தெரிவித்து தனது பேச்சை முடித்தார்.

அப்போது மேடையில் இருந்த மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள், பாப்புலர் முத்தையா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, மேடையில் இருந்த மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா நேரடியாகவே பாப்புலர் முத்தையாவிடம் வாக்குவாதம் செய்தார். இந்த காட்சிகளை பார்த்த கணேசராஜா ஆதரவாளர் மேடையில் ஏறி பாப்புலர் முத்தையாவை நோக்கி சென்றதால், அந்த நபரை கணேசராஜா தடுத்து  கீழே தள்ளினார்.

இதனால் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்கள் மேடை அருகே சென்று கடும் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத வேலுமணி இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். எனினும் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர்.  இதனால் அவர்களை வெளியே செல்லுமாறு வேலுமணி உத்தரவிட்டார். இதனை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் நடந்த கைகலப்பு பிரச்சினை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது

MUST READ