spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமே 8-ல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

மே 8-ல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

-

- Advertisement -
மே 8-ல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு
மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மே 8-ல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

மே 7ல் நீட் தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கு அடுத்த நாள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மே 8 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

we-r-hiring

அரசு தேர்வுகள் இயக்கத்தில் இருந்து செய்தி குறிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த செய்தி குறிப்பில் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த செய்தி குறிப்பை பொறுத்தவரை மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் என்பது பள்ளி கல்வித்துறை அமைச்சர்  8.5.2023 திங்கட்கிழமை அன்று வெளியிடப்படும் என்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கான இணையதளம் முகவரியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மே 8-ல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

8 ஆம் தேதி திங்கட்கிழமை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரி www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

மே 8-ல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கும் பள்ளி மாணவர்களுக்கு பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணில் தனித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறும் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஆகவே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 8 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது.

MUST READ